24 OCT 2026 அன்புடையீர்! வம்மின் இங்கே! ❤
#NNA SPIRITUAL NETWORKSUPPORT
WELCOME TO

#NNA SPIRITUAL NETWORK

🌀 மயக்கும் மாயை உலகில் 🌍 விழிப்புடன் இருக்க 👁️
உதவும் channel ▶️

அரிய மெஞ்ஞான கருத்துக்கள் எளிய புரிதலில் விளக்கும் ஒரே தளம்!

Rare spiritual wisdom, explained simply — in Tamil.

446+ பதிவுகள்30K+ followers5 platforms
STAY CONNECTED
SUPEREARTH V2.0
SLIDE POSTS

Swipe பண்ணிப் படிங்க

MORE →
4 SLIDES🙏📚 இதுபோன்று திருவருட்பாவை Comical-ஆன AI படங்களுடன் எளிமையாகப் படித்து அறிந்துகொள்ள விரும்பினால்… 3 SLIDESவள்ளலார் 203-ஆம் வருவிக்க உற்ற நாள் — சமரச சுத்த சன்மார்க்கப் பெருவிழா அழைப்பிதழ் (10.10.2026, சென்னை) 5 SLIDESஎத்தனை முறை பார்த்தாலும் மறக்க முடியாத ஒரு decoded video content அது😍🥰 8 SLIDES🌱 ஆரோக்கியமே உலகின் மிகப் பெரிய செல்வம்! 🏆 ஆனால், இந்த 6 பழக்கங்கள் (☕️🍩🍔🍷🌿🚬) நம் உடலை எப்படி அடிமைய 4 SLIDESநான் செய்த தவற்றை❌ நினைத்துப் பார்த்தால்💭 நானே நடுங்குகின்றேன் 6 SLIDES🤔🪞 நீ உன்னை யாரோ ஒருவருடன் ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறாயா? 👀⚖️ 4 SLIDESதிருவருட்பா இரண்டாம் திருமுறை | சிறு விண்ணப்பம்! பாடல் எண் : 609 8 SLIDES🔐🕵️‍♂️ ரகசிய அமைப்புகள்! 👁️📜
இன்றைய பாடல் · TODAY'S VERSE
திருவருட்பா · வள்ளலார் #3307
கொடிய வெம் புலிக் குணத்தினேன் 🐅 உதவாக் கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன் 👿கடிய நெஞ்சினேன் 💔 குங்குமம் சுமந்த கழுதையேன் 🐴 அவப் பொழுதையே கழிப்பேன் 😴விடியும் முன்னரே எழுந்திடாது உறங்கும் வேடனேன் 🛌 முழு_மூடரில் பெரியேன் 🤯அடியன் ஆவதற்கு என் செயக் கடவேன் அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே. 🙏
VERA LEVEL VALLUVAR · திருக்குறள்

வேற லெவல் வள்ளுவர்

49 குறள்கள் →
இறைவனைப் புரிந்து துதித்தால் இவ்வளவு பெரிய நன்மையா..?? 🙏
16 MAR 2026 இறைவனைப் புரிந்து துதித்தால் இவ்வளவு பெரிய நன்மையா..?? 🙏 முழுப் பதிவு →
FAQ

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

01சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன..?

உலகவர்கள் அனைவரும் சாதி மத பேதம் கடந்து ஒற்றுமையாக ஒருமித்து வாழ்ந்து பேரின்ப பெருவாழ்வை அடைவதே சுத்த சன்மார்க்கம்.

02NNA 4am Soul என்றால் என்ன..?

அமுதப் பொழுதாகிய அதிகாலை 4 மணிக்கு எழுந்து அருளாளர்களின் பாடல்களைப் படித்து உணர்ந்து ஊன்றி விசாரித்து நன்முயற்சியில் பழகும் ஆன்மாக்களே NNA 4am Soul.

03குரு / தீட்சை அவசியமா..?

நாம் பயணிப்பது சுத்த சன்மார்க்க பாதை என்பதால் இங்கு குரு, தீட்சை மற்றும் இதர சடங்கு சம்பிரதாயங்கள் அவசியம் அன்று.

04ஆன்ம வளர்ச்சி அடைய அன்பு மட்டுமே போதுமா..?

அன்பு = சிவம் ஆகையால் நாம் அனுதினமும் அன்பை (சிவத்தை) வளர்த்துக்கொள்ள வேண்டும் அதுவே ஆன்ம வளர்ச்சி!

அது தான் நம்மை சிவானுபவத்திற்கு இட்டுச்செல்லும்!

அன்பின் வழியது உயிர்நிலை ~திருவள்ளுவர்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் ~திருமூலர் அன்பெனும் அணுவுள் ளமைந்தபேர் ஒளியே அன்புரு வாம்பர சிவமே ~ வள்ளலார்
05சிவம் / சிவன் என்ன வேறுபாடு..?

சிவம் என்பது ஒரு கருணையான அறிவின் நிலை அந்த நிலையை அடைந்தவர் யாரோ அவரே சிவன். அந்த நிலையை யார் அடைகிறார்களோ அவரை சிவன் என்று அழைப்பர் ஆகையால் இந்த ஜீவனால் சிவனாக முடியும்.

ஜீவன் என சிவன் என்ன வேறில்லை
ஜீவனார் சிவனாரை அறிகிலர்
ஜீவனார் சிவனாரை அறிந்தபின்
ஜீவனார் சிவனாயிட்டு இருப்பரே
06ஜீவகாருண்யம் என்றால் என்ன..?

பிற உயிர்களை தம்முயிர் போல் எண்ணி அவ் உயிர்களுக்கு நேரும் இடையூறுகளை நீக்குவதே ஜீவகாருண்யம்.

07ஏன் மாமிசம் சாப்பிடக்கூடாது..?

“உயிர் கொலையும் , புலை பொசிப்பும் உடையவர்கள் உறவினத்தார் அல்லர் !! அவர்கள் புற இனத்தார் “ — வள்ளலார்

“தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.” — திருவள்ளுவர்

நம்மைப் போலவே ஊன், தசை, நரம்பு மண்டலம், வலியுணர்தல் ஆகிய பண்புகள் கொண்டு வாழும் விலங்குகளை துடிக்கக் கொன்று அதன் உடலை புசிப்பது முழுக்க முழுக்க கடவுள் விரோதமான செயல். ஆகையால் கொலை புலை மறுத்தலே சுத்த சன்மார்க்கத்தின் முதற்படி.

08மனிதனுக்கு மரணம் என்பது இயற்கையா..?

இல்லை, சுத்த சன்மார்க்கத்தில் மரணம் என்பது செயற்கை. எப்பொழுது ஒரு மனிதன் தான் இறக்கப் போகிறேன் என்று நம்புகின்றானோ அப்பொழுதே அவனுள் இறப்பு வேலை செய்ய தொடங்குகிறது அது என்றோ ஒரு நாள் முழுமை பெறுகிறது.

“மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.” — வள்ளலார்
Link copied ✓
இந்த வலைதளத்தில் என்ன தேட விரும்புகிறீர்கள்? 🔍ஒரு வார்த்தை சொல்லுங்க — பொருத்தமான பதிவுகளைக் காட்டுறேன்